எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பொருளாதார நிலைமை சீராகும்!

எதிர்பார்த்த செய்தி உங்கள் வீடு தேடி வரும் செலவுகள் அதிகமாவதால் உங்கள் சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

இன்றைய ராசிபலன்கள்
06-07-2020  (திங்கட்கிழமை)
நல்லநேரம்
காலை 6.15 முதல் 7.15 வரை
மாலை 4.45 முதல் 5.45 வரை
ராகுகாலம்
காலை 7.30 முதல் 9 வரை
எமகண்டம்
காலை 10.30 முதல் 12 வரை

மேஷம்

mesham ttn card

தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கணவன் மனைவிக்குள் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். வீண் செலவுகள் குறையும். வியாபாரத்தை பொருத்தவரையில் லாபமும் விற்பனையும் வழக்கம்போல் காணப்படும். பெண்கள் மிக எளிதாக செலவுகளை சமாளிப்பார்கள்.

ரிஷபம்

rishabam ttn card

அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்வீர்கள். பழைய கடன் விஷயத்தில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் .உங்கள் தந்தையின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தை பொருத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு இது மகிழ்ச்சியான தினமாக அமையும்.

மிதுனம்

midhunam ttn card

இன்றைய நாள் உங்களுக்கு சுமாரானதாக அமையும். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் சிறுசிறு பிரச்சினைகள் வந்து போகும். உங்கள் பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஓரளவு கிடைக்கும். இல்லத்தரசிகள் எதிர்பார்த்த பண உதவி நிச்சயம் கிடைக்கும்.

கடகம்

kadakam ttn card

உங்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உங்கள் மனதில் புதிய தெளிவு பிறக்கும். நீங்கள் கேட்ட இடத்தில் இருந்து பணம் நிச்சயம் உங்களை வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். செலவுகள் அதிகரித்தாலும் அதை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பீர்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் லாபம் நஷ்டம் நிச்சயம் இருக்காது. பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையும்.

சிம்மம்

simmam ttn card

உங்களுக்கான மன கவலைகள் அதிகரிக்கும். பொருளாதார சூழலில் மந்த நிலை காணப்படும். பணத்தேவை இருந்தும் அது கைக்கு கிட்டாததால் மனச்சோர்வை அடைவீர்கள். தேவையற்ற பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும் முடிந்தவரை இறைவழிபாட்டில் கவனம். அவர்களைப் பொறுத்தவரையில் புதிய முடிவுகளை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். பெண்கள் கூடுதலான குடும்பப் பொறுப்பை சுமப்பதால் கலக்கம் அடைவீர்கள்.

கன்னி

kanni ttn card

உங்கள் ஆலோசனைகளை உங்கள் குடும்பத்தினர் ஏற்க தொடங்குவார்கள். நீங்கள் எதிர்பார்த்த அரசாங்க உதவி நிச்சயம் உங்களை தேடி வரும். திருமணமாகாத ஆண் பெண் எவராயினும் அவர்களுக்கு திருமண யோகம் கிட்டும் காலமிது. வியாபாரிகளை பொறுத்தவரையில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும் நாள்.

துலாம்

thulam ttn card

இன்று உங்களுக்கு நடக்கும் அனைத்தும் சாதகமானதாக இருக்கும். நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி நிச்சயம் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகளை பொருத்தவரையில் வியாபாரிகள் உங்களிடம் ஆலோசனை பெற காத்திருக்கும் சூழல் ஏற்படும். பெண்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் நாள் இது.

விருச்சிகம்

viruchigam ttn card

உங்கள் பொருளாதார நிலைமை சீராக இருக்கும் பணவரவு அதிகமாக காணப்படும். உடல்நலம் சிறுசிறு உபாதைகள் வந்து நீங்கும். இருப்பினும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. வியாபாரிகளை பொருத்தவரையில் தொழிலை இரட்டிப்பாக்கும் சூழலும் அமையலாம். பெண்கள் இறைவழிபாட்டில் மனதை செலுத்துவார்கள்.

தனுசு

dhanusu ttn card

நீங்கள் தொடங்கும் செயல்கள் பல்வேறு தடைப்பட்டு தாமதமாகவே நடந்து முடியும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வரவை விட செலவு அதிகமாக உள்ளது என்ற கவலை உங்களை வாட்டி வதைக்கும். வியாபாரிகளை பொருத்தவரையில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். பெண்கள் மன சோர்வை அடைவார்கள்.

மகரம்

magaram ttn card

உங்கள் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள் இது. உங்கள் பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். வியாபாரிகள் வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். பெண்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

கும்பம்

kumbam ttn card

இன்று எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நல்ல தகவல்கள் உங்களை வந்து சேரும் சகோதரர்கள் வீண் பிரச்சினை செய்வார்கள், அவர்களுடன் விவாதத்தை தவிர்ப்பது நல்லது . வியாபாரிகளை பொருத்தவரையில் லாபமும் விற்பனையும் அமோகமாக கிடைக்கும். பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்

மீனம்

meenam ttn card

எதிர்பார்த்த செய்தி உங்கள் வீடு தேடி வரும் செலவுகள் அதிகமாவதால் உங்கள் சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். உங்கள் உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். அதை மறுக்க முடியாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். பெண்கள் மிகவும் சோர்வாகவும் ஒரு சில உபாதைகள் உடனும் காணப்படுவீர்கள்.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...