எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணியிடத்தில் சில சங்கடமான சூழல்கள் உண்டாகும்!

உறவினர்களுடன் இருந்த பாதக நிலை மாறும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் நடந்து கொள்வார்கள்

04-07-2020 (ஞாயிற்றுக்கிழமை)
நல்ல நேரம்
காலை 6.15 முதல் 7.15 வரை
மாலை 3.15 முதல் 4.15 வரை
ராகு காலம்
மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம்
பிற்பகல் 12 முதல் 1.30 வரை

மேஷம்


பொறுமை தான் ரொம்பவும் முக்கியம். உங்கள் பணியில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க அனுமதிக்க வேண்டாம். சில காரியங்கள் தடைப்படலாம். அதனால் உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உங்கள் வெற்றி உங்களை விட்டு எங்கும் சென்றுவிடாது.

ரிஷபம்


உங்களது மனசாட்சியின் படி முடிவெடுங்கள். மற்றவர்களின் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். பணியிடத்தில் சில சங்கடமான சூழல்கள் நிலவினாலும், விரைவில் சரியாகும்.

மிதுனம்


மனரீதியாக இன்று யாராவது உங்களை காயப்படுத்தக் கூடும். ஆனாலும், உங்கள் இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பீர்கள். உங்கள் நண்பர்களின் வார்த்தை உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

கடகம்


வெற்றி நீங்கள் நெருங்கும் தூரத்தில் தான் இருக்கிறது. உங்களை சுயபரிசோதனை செய்துக் கொள்ள இன்று உங்களுக்கு அற்புத வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடுகளில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் கூட தொலைபேசியில் பேசி உங்களது பழைய உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுங்கள். வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசும் நேரம் வந்து விட்டது. அதனால் உங்கள் பொருளாதார நிலைமை மேம்படும்.

சிம்மம்


நிதி நிலைமையில் சிக்கல்கள் இருக்கும். செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நேரம். பெற்றோரிடம் அன்பு கொள்ளுங்கள். அவர்களின் உடல்நலனில் அக்கறை கொள்ளுங்கள். சரியான நேரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

கன்னி


யாருடைய பேச்சையும் கேட்காமல் இருப்பதால் சில பிரச்சனைகள் உருவாகலாம். ஆனால் அதெல்லாம் சிறிது நேரத்தில் மறைந்து போகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தை தவிர்க்கலாம்.

துலாம்


இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையலாம். குழந்தைகளால் நல்ல பெயர் கிடைக்கும். சொந்த தொழில் துவங்குவதற்கான நேரம் இதுவல்ல. ஒரு மாதம் தள்ளிப் போடுங்கள். தாய்வழி உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.

விருச்சிகம்


விடாமுயற்சியால் நிச்சயம் வெற்றியை நெருங்கி விடுவீர்கள். மற்றவர்களுக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும் இன்று. உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த பாதக நிலை மாறும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் நடந்து கொள்வார்கள்.

தனுசு


இதுவரை மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் தடைப்பட்டுக் கொண்டே போனதே என்று கவலைப்படாதீர்கள். சீக்கிரம் நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணத்தட்டுபாடு விலகும். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு உதவியும் அன்பும் அளிப்பார்கள்

மகரம்


உங்களது தனிப்பட்ட சிந்தனைகளை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வதே இப்போது உங்களுக்கு நல்லது. தோல்வியால் நீங்கள் தடைப்பட்டு நிற்க வேண்டாம். அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும்.

கும்பம்


புதிய மாற்றங்களுக்காக அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள்.

மீனம்


இன்றைய நாள் துல்லியமாகவும், நேர்மையாகவும் உங்களை பணியை செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு எது சரியென படுகிறதோ, அதைச் செய்வதில் முனைப்பு காட்டுவீர்கள். குடும்பத்தினர்களுடன் இன்றைய நாளை அமைதியாக கழிப்பீர்கள்.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...