எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

மேஷம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வர் குடும்ப பொறுப்புகள் அலைச்சலும் சோர்வும் உண்டாகும் உறவினர்கள் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். கணவரிடம் இருந்து எதிர் பார்த்த பணம் கிடைப்பதால் பெண்களுக்கு சிரமம் உண்டாகாது. வியாபாரிகளை பொறுத்தவரை எப்போதும் போல லாபம் விற்பனையும் அமோகமாக இருக்கும்

ரிஷபம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

உங்கள் தந்தை வழி சொந்தங்கள் குடும்பத்தில் அதிக முதலீடு செய்வதால் குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரணையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குறிப்பாக தந்தையின் உடல் நலத்தில் கவனமாக இருங்கள். வியாபாரிகளை பொருத்தவரை வாடகை இடத்தில் இருப்போர் சொந்த இடத்திற்கு மாறும் யோகமும் உண்டு. இல்லத்தரசிகளுக்கு இது மகிழ்ச்சியான நாளாக அமையும்.

மிதுனம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

ஓரளவு அனுகூலமான நாளாக அமையும். செலவுகள் கட்டுக்குள் வரும்.. பேசும் போது பொறுமை தேவை உங்கள் உடன் பிறந்தவர்களுடன் அனுசரணையாக இருங்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த சில உடல் உபாதைகள் முடிவுக்கு வரும்.

கடகம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

எதிரிகளால் ஏற்பட்ட இடையூறு நீங்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் விரயம் ஏற்பட்டாலும் அதற்கேற்ற வரவு கிடைப்பதால் சமாளித்துவிடுவீர்ள். தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும். வியாபாரிகளை பொருத்தவரை லாபம் அதிகரிக்கும். மற்ற வியாபாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்கும் அளவிற்கு தொழிலில் முன்னேறுவீர்கள். இல்லத்தரசிகளுக்கு புகுந்த வீட்டில் உள்ள உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்

சிம்மம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். கணவன் மனைவி இடையே ஒருமித்த கருத்து ஏற்படும். உங்கள் முயற்சிகளுக்கு உங்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகளை பொருத்தவரையில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். இல்லத்தரசிகளை பொருத்தவரையில் பொறுப்பு கூடி இருப்பதால் மனதில் சோர்வு ஏற்படும்।

கன்னி

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

வீட்டில் மகிழ்ச்சி நிம்மதி உண்டாகும். பொருளாதார வசதியின் எந்த குறைவும் இருக்காது. மூன்றாவது நபரால் கணவன்-மனைவிக்குள் சண்டை ஏற்படலாம் அதனால் கவனமாக கையாள வேண்டும். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் சுலபமாக நடந்து முடியும். வியாபாரிகளை பொறுத்தவரையில் விற்பனையும் லாபமும் மிகவும் சுமாராக இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனநிம்மதி ஏற்படும். வீட்டில் மிக எளிய முறையில் சுப நிகழ்ச்சி நடைபெறும்.

துலாம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

பணம் கை நிறைய வந்தாலும் அதற்கு ஏற்ப சில செலவுகளும் அதிகரிக்கும். சில நேரங்களில் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரிகளை பொறுத்தவரையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அதனால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. புகுந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். செலவுகள் அதிகம் ஆனாலும் அதை சமாளிக்கும் திறன் உங்களுக்கு ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். திருமண வயதில் உள்ள ஆண் பெண் யாராகினும் அவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்படும். வியாபாரிகளை பொருத்தவரையில் யாருடைய பேச்சையும் கேட்டு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்

தனுசு

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

நீங்கள் எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி உங்களை வந்து அடையும். கணவன் மனைவிக்குள் சிறுசிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் பேச்சினால் குடும்பத்தினரிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். அதனால் பேச்சில் கவனம் மிக அவசியம். செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தை பொருத்தவரையில் புதிதாக வியாபாரம் தொடங்க முயற்சிப்பவர்கள் அதை தாராளமாக ஆரம்பிக்கலாம். இல்லத்தரசிகள் பணப்புழக்கம் அதிகமாக ஏற்படும் சூழல் இருப்பதால் சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்

மகரம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

பொருளாதார சூழ்நிலை மிகவும் சுமாராக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருங்கள். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். குலதெய்வத்தை வீட்டிலிருந்தபடி பிரார்த்தனை செய்வது அனுகூலத்தை தரும். வாடகை இடத்தில் இருக்கும் கடையை சொந்த இடத்திற்கு மாற்ற சந்தர்ப்பம் கனிந்து வரும். இல்லத்தரசிகளுக்கு பிள்ளைகளால் சில தொல்லைகள் ஏற்படலாம்.

கும்பம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

எந்த முடிவையும் யோசித்து எடுக்க வேண்டிய நாள் இது. குறிப்பாக முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம் . உங்கள் இளமைக் கால நண்பர் உடன் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். வியாபாரிகளை பொருத்தவரையில் லாபம் ஓரளவுக்கு கிடைக்கும், வாடிக்கையாளர்களுடன் கனிவாக பேசுங்கள். பெண்களுக்கு ஏற்படும் சோர்வு நீங்கி விரைவில் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

மீனம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணப்புழக்கம் அதிகரிக்கும்!

குடும்பத்தில் பொருளாதார சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை உடனடியாக சரி செய்து விடுவீர்கள். அரசாங்க வகையில் நீங்கள் எதிர்பார்த்த காரியம் உங்களை வந்து சேரும். வியாபாரிகளை பொருத்தவரையில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். இல்லத்தரசிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும் நாள் இது.