• July
    17
    Wednesday

Main Area

Main



நேத்து மட்டுமில்ல இன்னைக்கும் மழை இருக்காம்: சென்னை வானிலை மையம் தகவல்!

மழை
மழை
Loading...

சென்னை: தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய  வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தென்மேற்கு பருவ மழை தாமதமான நிலையில்  தமிழக மக்கள் தண்ணீர் இல்லாமலும், வெப்பத்தாலும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், அம்பத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதேபோல் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்தது. 

rain

இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக  இன்றும் தமிழகத்தில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.