இன்று மட்டும் 1,000 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

 

இன்று மட்டும் 1,000 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநிலங்களில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போது வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் தேர்தல் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல் என சுழன்று வருகிறது.

இன்று மட்டும் 1,000 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. அன்றே துணை முதல்வர் ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்து பிள்ளையார் சுழி போட்டு வைத்தார். அவரைத் தொடர்ந்து, நல்ல நாள் பார்த்து நேற்று முதல்வர் வேட்பாளர்கள் எல்லாரும் அடுத்தடுத்து மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பு ரூ.10 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவடையவுள்ள நிலையில், பல்வேறு தொகுதிகளில் இன்று ஏராளமான வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று மட்டும் 1,000 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.