முதல்நாளில் 1,65,714 பேருக்கு தடுப்பூசி- மத்திய சுகாதாரத்துறை

 

முதல்நாளில் 1,65,714 பேருக்கு தடுப்பூசி- மத்திய சுகாதாரத்துறை

கொரோனாவுக்கு எதிரான உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். கோவிஷீல்ட், கோவாக்சின் என இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள யாரும் வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் தாமாக முன்வருபவர்களுக்குப் போடப்படும் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது. அதன்படி முதற்கட்டமாக கொரோனா தடுப்பில் முன்கள வீரர்களாச் செயல்படும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் மனிஷ் குமார் (34) என்பவர், இந்தியாவிலேயே முதன்முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

முதல்நாளில் 1,65,714 பேருக்கு தடுப்பூசி- மத்திய சுகாதாரத்துறை

டெல்லி ஜம்மு காஷ்மீர், ஒடிசா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. குஜராத், உத்தரப்பிரதேசம் , ஆந்திரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைத்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் முதல் நாளில் 1,65,714 முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் 16 ஆயிரத்து 963 பேருக்கும் பீகாரில் 16,401 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் இன்று 2,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடபட்டது.