முதல்வரின் தாயை இழிவுப்படுத்துவதா? ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வார்னிங்!!

 

முதல்வரின் தாயை இழிவுப்படுத்துவதா? ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வார்னிங்!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயை திமுக இழிவுபடுத்தியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முதல்வரின் தாயை இழிவுப்படுத்துவதா? ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வார்னிங்!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி , “தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது . எங்கள் நோக்கம் வளர்ச்சி; காங்கிரஸ் – திமுகவின் நோக்கம் குடும்ப அரசியல். நாட்டின் வளர்ச்சிதான் பாஜக தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் நோக்கம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயை திமுகஇழிவுப்படுத்தியுள்ளது . இதனை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் மக்கள் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் . உங்கள் பேச்சுக்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் . பாஜகவுக்கு வளர்ச்சிதான் முக்கியம் .ஆனால் திமுக காங்கிரஸ் அவர்களது குடும்பம் தான் முக்கியம்.

முதல்வரின் தாயை இழிவுப்படுத்துவதா? ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வார்னிங்!!

பெண்கள் குறித்து திமுகவை சேர்ந்த திண்டுக்கல் ஐ லியோனி கடுமையாக விமர்சித்துள்ளார். ஒருவேளை அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் பெண்களை மேலும் வெளிப்படுத்துவார்கள். திமுகவும் காங்கிரசும் உங்களது தலைவர்களை கட்டுப்படுத்தி வையுங்கள். பெண்களை இழிவுப்படுத்திய திமுக தலைவர்களை கட்சி தலைமை கண்டிக்கவில்லை. திமுக இளவரசர் பொறுப்புக்கு வந்த பிறகு பல மூத்த தலைவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர் ” என்றார்.

முதல்வரின் தாயை இழிவுப்படுத்துவதா? ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வார்னிங்!!

தொடர்ந்து பேசிய அவர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். திருப்பூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ‘வேல்’ பரிசளித்தார். வேலை பெற்றுக்கொண்ட மோடி வெற்றிவேல் வீர வேல் என்று கூறினார்.