பப்ஜி பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி! கைமாறியதால் மீண்டும் இந்தியாவிற்குள் ரீஎண்ட்ரி…

 

பப்ஜி பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி! கைமாறியதால் மீண்டும் இந்தியாவிற்குள் ரீஎண்ட்ரி…

இந்திய எல்லையில் சீன அரசு ஆக்கிரமைப்பு செய்ய ஆரம்பித்ததும் இந்தியா, சீனாவின் டிக் டாக் க்கு முதலில் தடை விதித்தது. அதை தொடர்ந்து இப்போது சீன ஆப் பப்ஜி உள்ளிட்ட 118 விளையாட்டு ஆப்ஸ்களுக்கு தடை விதித்துள்ளது. உலகில் 600 மில்லியனுக்கும் அதிகமான டவுன் லோட் மற்றும் 50 மில்லியன்களுக்கும் மேல் செயல்பாடுகளில் உள்ள சீனா ஆப் பப்ஜிக்கு கடந்த 2 ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் பப்ஜி கேம் பிரியர்கள் கடும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். ஆனால் கேம் பிரியர்களின் பெற்றோர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் இந்த ஊரடங்கு நேரத்தில் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொழுதுபோகான இந்த பப்ஜியையே இப்படி ஒழித்துவீட்டீற்களே என ஏராளமான பப்ஜி பிரியர்கள் புலம்பியபடியே இருக்கின்றனர்.

பப்ஜி பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி! கைமாறியதால் மீண்டும் இந்தியாவிற்குள் ரீஎண்ட்ரி…

இந்த சூழலில் பப்ஜி கேம் செயலியின் மொத்த கட்டுப்பாட்டையும் தென் கொரிய நிறுவனம் வாங்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பப்ஜி கேம், சீனாவின் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தால் கட்டுப்படுத்தபடாது என்றும், தென் கொரிய நிறுவனமான பப்ஜி கார்பரேஷன், அனைத்து துணை நிறுவனங்களின் முழு பொறுப்பையும் ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மீண்டும் அந்த கேம் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.