கொரோனாவை தடுப்பூசி போட்டாச்சா?அப்ப உங்களுக்கு அதிக வட்டி தருகிறோம் -சென்ட்ரல் வங்கி

 

கொரோனாவை தடுப்பூசி போட்டாச்சா?அப்ப உங்களுக்கு அதிக வட்டி தருகிறோம் -சென்ட்ரல் வங்கி

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், கொரோனா தடுப்பூசி மீதான விழிப்புணர்வை பல்வேறு வழிகளில் அரசு மக்களுக்கு ஏற்படுத்திவருகிறது. அதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் புதிய டெபாசிட் திட்டத்தில் கூடுதல் வட்டி வழங்க ‘‘எதிர்ப்பு சக்தி கொண்ட இந்தியா’’ டெபாசிட் திட்டத்தை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. கோவாக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

இந்த திட்டத்தின் மூலம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். இது 1111 நாட்களுக்கான டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தில் கூடுதலாக கால் சதவீதம் வட்டி கிடைக்கும். குறுகிய காலத் திட்டத்திற்கு இந்த சலுகை இருப்பதால், இந்த டெபாசிட் திட்டத்தில் மக்கள் சேரலாம். முதியோருக்கும் இந்த கூடுதல் வட்டி டெபாசிட் திட்டம் அமலாகும்.