இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 5 விஷயங்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு

 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 5 விஷயங்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 5 விஷயங்கள் மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதம மந்திரி நரேந்திர மோடி இன்று காலை இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் வருடாந்திர அமர்வில் உரையாற்றினார். அப்போது பொருளாதாரம் தொடர்பான பல அம்சங்கள் குறித்து அவர் உரையாற்றினார். கொரோனா ஊரடங்கால் நாடு சந்தித்துள்ள பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுப்பது பற்றி அவர் குறிப்பிட்டார். அதற்கு ஐந்து விஷயங்களை முக்கியமாக மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார். அதாவது நோக்கம், உள்ளடக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு, புதுமை ஆகிய ஐந்து விஷயங்கள் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் நாட்டின் வளர்ச்சியை மெதுவாக்கி உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளன. அதன்படி அன்லாக் 1 ஏற்கனவே அமல் செய்யப்பட்டு விட்டதால் நாட்டின் வளர்ச்சியை மீட்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம். அரசாங்கத்தின் முடிவுகளைப் புரிந்து கொள்ள, உலக நிலைமையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.