காலையில் அறிக்கை… மாலையில் தேர்வுகள் ஒத்திவைப்பு – மாஸ் காட்டும் ஸ்டாலின்!

 

காலையில் அறிக்கை… மாலையில் தேர்வுகள் ஒத்திவைப்பு – மாஸ் காட்டும் ஸ்டாலின்!

கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிதீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினசரி உயர்ந்த வண்ணமே இருக்கிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10 ஆயிரத்து 906 காலி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு நடைபெறுவதாக இருந்தன.

காலையில் அறிக்கை… மாலையில் தேர்வுகள் ஒத்திவைப்பு – மாஸ் காட்டும் ஸ்டாலின்!

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இத்தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். திருவிழாக்கள், திருமணங்கள், மக்கள் கூடும் பொது இடங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கு உடற்தகுதித் தேர்வுகள் சில நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.