டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

 

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பல தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. அந்த வகையில், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அண்மையில் அறிவித்திருந்தார்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

இதனிடையில், பல மாநிலங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளும், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளும் கூட ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்- 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 28,29,30ம் தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மை தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

ஜூன் 6ஆம் தேதி நடக்கவிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பதவிக்கான தேர்வும், ஜூன் 5ம் தேதி நடக்கவிருந்த ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், டேராடூன் கல்லூரியில் 2022ம் பருவத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசமும் மே 21 வரை நீடிக்கப்பட்டுள்ளது.