நம்பிக்கையோடு இருங்கள்… கொரோனா முடிந்த பிறகு தேர்வு! – டி.என்.பி.எஸ்.சி செயலர் அறிவிப்பு

தற்போதைய சூழலில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த முடியாது, ஆனால் தேர்வுகள் கட்டாயம் நடக்கும், எனவே போட்டியாளர்கள் நம்பிக்கை இழக்காமல் தேர்வுக்குத் தயாராகும் படி டி.என்.பி.எஸ்.சி செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுப் பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் மூலம் தேர்வு நடக்கிறது. இந்த ஆண்டு குரூப் 1 தேர்வு ஏப்ரல் மாதமும், குரூப் 2 தேர்வு ஜூலை மாதமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் நடத்த முடியவில்லை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாலும் எப்போது நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிடவில்லை.

இந்த நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மருத்துவ முகாமை தொடங்கிவைக்க அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். அவருடன் டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமாரும் வந்திருந்தார். அவரிடம் தேர்வுகள் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தேர்வுகள் நடைபெறுமா, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா என்ற சந்தேகம் வேண்டாம். தற்போதைய சூழலில் தேர்வு நடத்த வாய்ப்பில்லை. கொரோனா பிரச்னை தீர்ந்தவுடன் குரூப்1, குரூப் 2 தேர்வுகள் நிச்சயம் நடைபெறும். இரண்டு தேர்வுக்கும் மூன்று மாத கால இடைவெளி இருக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும். மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வுக்குத் தயாராக வேண்டும்” என்றார்.

Most Popular

ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.15,000- முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை 9,33,450 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல இடங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்கள்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தங்கத்தேர் இழுக்க அனுமதி!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் மூடப்பட்டன. இருப்பினும் நாளை ஆடி மாதம் துவங்க இருப்பதால் கோயில்களில் திருவிழாக்கள்...

`மறுவீட்டுக்கு சென்ற தம்பதி; தூக்கில் தொடங்கிய புதுப் பெண்!’- 5வது நாளில் நடந்த விபரீதம்

திருமணமான 5வது நாளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூரில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் கோவில் வழி அருகே உள்ள அமராவதி நகரைச் சேர்ந் ராஜு- வள்ளியம்மாள் தம்பதிக்கு அழகேஸ்வரி,...

எளாவூர் சோதனைச்சாவடியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்!

எளாவூர் சோதனைச்சாவடியில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் சோதனைச்சாவடியில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில்...
Open

ttn

Close