டிஎன்பிஎல் இறுதிப்போட்டி- திருச்சியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன்

 

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி- திருச்சியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன்

நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று சென்னையில் சேப்பாக்கமத்தில் உள்ள எம்.எ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.இதில் ரூபி திருச்சி வாரியர்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர்ர் கில்லீஸ் ஆகிய அணிகள் மோதின.

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி- திருச்சியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன்

டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சேப்பாக் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கௌசிக் காந்தி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி பவர்பளே ஆன முதல் 6 ஓவரில் 58 ரன்கள் குவித்து அதிரடி துவக்கம் தந்தனர்.19 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்த கௌசிக் காந்தி பொய்யாமொழியின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடி வந்த ஜெகதீசன் 39 பந்துகளில் அரை சதம் அடித்தார்.அடுத்து வந்த ராதாகிருஷ்ணன் மற்றும் சசிதேவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.பிரமாதமாக ஆடிய ஜெகதீசன் 58 பந்துகளில் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர்ர கில்லீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

184 என்ற இலக்கை துரத்திய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு அதிரடி துவக்கம் கிடைத்தது.அமித் சாத்விக் 16 பந்துகளில் 36 ரன்கள் குவிக்க பவர் பிளே முடிவில் 65 ரன்களை எட்டியது திருச்சி.பின்னர் வந்த ராஜகோபால் தன் பங்கிற்கு 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.அமித் சாத்விக் மற்றும் ராஜகோபால் ஆகியோர் ஆட்டமிழந்த பின்னர் ஆட்டம் சேப்பாக் சூப்பர்ர கில்லீஸ் இன்றைக்கு முழுமையாக சென்றது.இதன் பிறகு வந்த சரவணகுமார் தனி ஒருவனாக போராடினார்.கடைசி ஓவரில் திருச்சி அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது , பரபரப்பான இந்த கடைசி வரை சேப்பாக் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் வீசினார்.
இந்த ஓவரை அற்புதமாக வீசிய சாய் கிஷோர் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.இதன்மூலம் சேப்பாக் சூப்பர்ர் கில்லீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த வருட டிஎன்பிஎல் கோப்பையை வென்றது.20 ஓவரில் திருச்சி அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
சரவணக்குமார் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார்.