டிஎன்பிஎல்- கோவையை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல்

 

டிஎன்பிஎல்-  கோவையை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல்

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் எனக்கும் தகுதிச்சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

Image

டாஸ் வென்ற திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சாய் சுதர்சன் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். இறுதிகட்டத்தில் கேப்டன் ஷாருக்கான் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் கோவை அணி 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது.சுதர்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் குவித்தார். திண்டுக்கல் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய குர்ஜப்நீட் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Image

144 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் லோகேஸ்வர் மற்றும் மணிபாரதி விரைவாக ஆட்டமிழக்க ஹரி நிஷாந்த் மற்றும் விவேக் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ஆடி வந்த ஹரி நிஷாந்த் அரைசதம் அடித்து 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய விவேக் 25 பந்துகளில் அரைசதம் கடந்து திண்டுக்கல் அணியை எளிதில் வெற்றி பெற வைத்தார்.17.3 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி தகுதிச்சுற்று 2ல் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியுடன் நாளை மறுநாள் மோத உள்ளது.தோல்வியடைந்த கோவை அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இருந்து வெளியேறுகிறது