டிஎன்பிஎல்- மதுரையுடன் மல்லுக்கட்டி வெற்றி வாகை சூடிய சேலம்

 

டிஎன்பிஎல்- மதுரையுடன் மல்லுக்கட்டி வெற்றி வாகை சூடிய சேலம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 26வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்னஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

டிஎன்பிஎல்- மதுரையுடன் மல்லுக்கட்டி வெற்றி வாகை சூடிய சேலம்

டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்னஸ் அணி முதலில் பேட்டிங்யை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சேலம் அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப , பின்னர் வந்த விஜய் ஷங்கர் 47 ரன்கள் சேர்த்தார். இறுதிகட்டத்தில் முருகன் அஸ்வின் 30 ரன்களும் பெராரோ 30 ரன்களும் சேர்த்தனர். சேலம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை சேர்த்தது.

145 என்ற இலக்குடன் தொடங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் சொதப்பி ஏமாற்றம் அளித்தனர். மதுரை அணியின் கேப்டன் சட்டர்வே தன் பங்குக்கு 23 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக ஆடிய சீதாராம் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் மதுரை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம் சேலம் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.