டிஎன்பிஎல்- சேப்பாக் சூப்பர் கில்லீஸிடம் சுருண்டது மதுரை பாந்தர்ஸ்

 

டிஎன்பிஎல்- சேப்பாக் சூப்பர் கில்லீஸிடம் சுருண்டது மதுரை பாந்தர்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகள் மோதின.

டிஎன்பிஎல்- சேப்பாக் சூப்பர் கில்லீஸிடம் சுருண்டது மதுரை பாந்தர்ஸ்

டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய மதுரை அணியை சித்தார்த் மணிமாறன் தனது சுழலில் கட்டுப்படுத்தினார். பிரவீன் குமார்,சுகந்திரன், சீதாராம் மற்றும்அருண் கார்த்திக் ஆகியோர் சித்தார்த் மணிமாறனின் சூழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சட்டர்வே மட்டும் தனி ஒருவராக போராடி அரைசதம் அடித்தார். ஒரு வழியாக சட்டர்வே 70 ரன்களில் ஆட்டமிழக்க,20 ஓவர் முடிவில் மதுரை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணியின் சித்தார்த் மணிமாறன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

125 என்ற எளிய இலக்குடன் ஆடிய சேப்பாக் அணியின் துவக்க ஆட்டக்காரர் காந்தி நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடிய கௌசிக் காந்தி 50 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.சசி தேவ் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.18.5 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.