டிஎன்பிஎல்: ராயல் கிங்ஸ் vs திண்டுக்கல் dragons

 

டிஎன்பிஎல்: ராயல் கிங்ஸ் vs திண்டுக்கல் dragons

நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 20வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

டிஎன்பிஎல்: ராயல் கிங்ஸ் vs திண்டுக்கல் dragons

டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. திண்டுக்கல் அணியின் மணிபாரதி 30 ரன்களும், ரவி ஸ்ரீனிவாசப் 60 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் விவேக் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் டேவிட்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

148 என்ற கடின இலக்கை துரத்திய நெல்லை அணிக்கு ஆரம்பமே சுமாராக அமைந்தது. நெல்லை அணியின் பேட்ஸ்மேன் அபராஜித் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நடு வரிசையில் ராஜன் பால் தன் பங்கிற்கு 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய சஞ்சய்குமார் தன் பங்கிற்கு 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.18.5 ஓவர் முடிவில் நெல்லை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து நெல்லை அணியின் வெற்றியை உறுதி செய்தனர். திண்டுக்கல் அணியின் லட்சுமிநாராயணன் மாரியப்பன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.