டிஎன்பிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கம் அணி த்ரில் வெற்றி

 

டிஎன்பிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கம் அணி த்ரில் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டிஎன்பிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கம் அணி த்ரில் வெற்றி

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கௌஷிக் காந்தி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய சேலம் அணியில் கோபிநாத் 33 ரன்கள் குவித்து அதிரடி துவக்கம் தந்தார். நடுவரிசையில் வந்த விஜய் சங்கர் தனது பங்குக்கு 32 ரன்கள் சேர்த்தார். இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடிய பெராரியோ 22 பந்துகளில் 39 ரன்கள் குவித்து. ஆட்டமிழந்தார்.20 ஓவர் முடிவில் சேலம் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

143 என்ற இலக்குடன் தனது இன்னிங்சை தொடங்கிய சேப்பாக் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.கேப்டன் கௌஷிக் காந்தி ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஒருபுறம் விக்கெட் கீப்பர் ஜெகதீசன் நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணமாக இருந்தன. பின்னர் ஜெகதீசன் மற்றும் சசி தேவ் ஆகியோர் ஜோடி சேர்ந்து சேர்ந்தனர்.
சிறப்பாக ஆடிய ஜெகதீசன் 52 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக ஆடி வந்த சசி தேவை தன் பங்கிற்கு 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் அதிரடியாக அடையாறு குமார் 14 பந்துகளில் 27 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வெற்றி பெறச் செய்தார். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18.5 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.