டிஎன்பிஎல்- கோவை அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

 

டிஎன்பிஎல்- கோவை அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ்அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Image

முதலில் பேட் செய்த சேப்பாக் அணியின் முன்கள வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் வந்த சாய் கிஷோர் மற்றும் ராஜகோபால் சதீஷ் ஆகியோர் ஜோடி சேரும். சாய் கிஷோர் நிதானமாக ஆட ராஜகோபால் சதீஷ் 32 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சாய் கிஷோரும் 32 ரன்களில் ஆட்டமிழக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை குவித்தது

160 என்ற இலக்குடன் தொடங்கிய கோவை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை.கோவை அணியின் துவக்க ஆட்டக்காரர் கவின் மற்றும் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்ரீதர் ராஜூ தன் பங்குக்கு 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் லைகா கோவை கிங்ஸ்அணி 20ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.