டிஎன்பிஎல்: திருச்சி அணி த்ரில் வெற்றி

 

டிஎன்பிஎல்: திருச்சி அணி த்ரில் வெற்றி

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 7வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் மதுரை பந்தர்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதுவரை இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

Image

டாஸ் வென்ற மதுரை பந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மதுரை அணியில் கவுசிக் அசத்தலாக விளையாடி அதிகபட்சமாக 42 ரன்களை குவித்தார். 20 ஓவர் முடிவில் மதுரை அணி 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட்டை தொடங்கிய திருச்சி அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக அமித் சாத்விக் மற்றும் சுமந்த் ஜெயின் களமிறங்கினர். இருப்பினும் திருச்சி அணிக்கு தொடக்கமே படுமோசமாக இருந்தது. 10 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை அடுத்தடுத்து பறிக்கொடுத்தது. அதன்பின் களமிறங்கிய அட்னன் கான் சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 2 ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியாக 19வது ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து திருச்சி அணி த்ரில் வெற்றிப்பெற்றது.