டிஎன்பிஎல்: 2வது ஆட்டத்தில் கோவையை வீழ்த்திய திண்டுக்கல்

 

டிஎன்பிஎல்: 2வது ஆட்டத்தில் கோவையை வீழ்த்திய திண்டுக்கல்

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டிஎன்பிஎல்: 2வது ஆட்டத்தில் கோவையை வீழ்த்திய திண்டுக்கல்

டாஸ் வென்ற திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. திண்டுக்கல் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீதர் ராஜு மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் களமிறங்கினர். திண்டுக்கல் பந்துவீச்சை நாலாபுறமும் வெளுத்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில் சுரேஷ்குமார் 58 ரன்களில் ஆட்டமிழந்தார், பின்னர் வந்த சாய் சுதர்சனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, 20 ஓவர் முடிவில் கோவை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. ஸ்ரீதர் ராஜூ 90 ரன்களுடனும் சாய் சுதர்சன் 40 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

202 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் அருண் 20 ரன்களில் ஆட்டமிழக்க, ஹரி நிஷாந்த் மற்றும் மணிபாரதி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் கோவை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். ருத்ரதாண்டவம் ஆடிய மணிபாரதி 32 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார், ஹரி நிஷாந்த் தன் பங்கிற்கு 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த 2 பேட்ஸ்மேன்களும் டக் அவுட்டாகி அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் பதற்றம் பற்றிக்கொண்டது. இறுதிகட்டத்தில் சாமிநாதன் பொறுப்புடன் ஆடி 17 ரன்கள் அடித்து, திண்டுக்கல் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 18 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.