கே.பி.முனுசாமியா? முருகனா? நெருக்கடியில் வேப்பனப்பள்ளி #Veppanapalli

கே.பி.முனுசாமியா? முருகனா? நெருக்கடியில் வேப்பனப்பள்ளி #Veppanapalli

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைசி தொகுதியாக வேப்பனப்பள்ளி . இது தமிழகம், ஆந்திர மற்றும் கர்நாடக மாநில எல்லைகளையும் கொண்ட ஒரே தொகுதியாக பார்க்கப்படுகிறது. வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் வேப்பனப்பள்ளி, சூளகிரி, ராயகோட்டை, உத்தனப்பள்ளி என சில முக்கிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் 24 ஊராட்சிகள் உள்பட இந்த தொகுதியில் மொத்தம் 73 ஊராட்சிகள் உள்ளது.

கடந்த தேர்தல் நிலவரம்

கே.பி.முனுசாமியா? முருகனா? நெருக்கடியில் வேப்பனப்பள்ளி #Veppanapalli

வேப்பனப்பள்ளி தொகுதியில் 2011 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த செங்குட்டுவன் வெற்றி பெற்றார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 471. 2016இல் முருகன் திமுக சார்பாக வெற்றி வாகை சூடினார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 952. 2011ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டது வேப்பனப்பள்ளிதொகுதி. இங்கு 2 முறையும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிடும் வேட்பாளர்கள்

கே.பி.முனுசாமியா? முருகனா? நெருக்கடியில் வேப்பனப்பள்ளி #Veppanapalli

அதிமுக சார்பில் கே.பி. முனுசாமி, திமுக சார்பில் பி. முருகன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஜெயபால், நாம் தமிழர் கட்சி சார்பில் சக்திவேல், தேமுதிக சார்பில் முருகேசன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தொகுதி பிரச்னைகள்

கே.பி.முனுசாமியா? முருகனா? நெருக்கடியில் வேப்பனப்பள்ளி #Veppanapalli

வேப்பனபள்ளி தொகுதி மக்களின் முக்கிய பிரச்சினையாக கூறப்படுவது குடிநீர் பிரச்சினை. இங்கு குடிநீர் பிரச்சினை என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். அதேபோல் சாலை பிரச்சனையும் இங்கு பிரதானமாக உள்ளது. வேப்பனப்பள்ளி தொகுதியை பொறுத்தவரை இங்கு திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கும் ,சரிசமமான போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்குமே வெற்றி வாய்ப்பு என்பது சமநிலையில் உள்ளது.