வாக்குப்பதிவு செய்த அரசியல் தலைவர்கள்!!

 

வாக்குப்பதிவு செய்த அரசியல் தலைவர்கள்!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் வாக்கினை செலுத்தி வருகிறார்கள்.

வாக்குப்பதிவு செய்த அரசியல் தலைவர்கள்!!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வாக்குப்பதிவு செய்த அரசியல் தலைவர்கள்!!

புதுக்கோட்டை இலுப்பூர் அரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்குப்பதிவு செய்த அரசியல் தலைவர்கள்!!

அமைச்சர் ஓ.எஸ். மணியன் வேதாரண்யம் அருகே ஓரடியம்புலம் வாக்கு சாவடியில் வாக்குப் பதிவு செய்தார்.அவிநாசி தொகுதியில் போட்டியிடும் சபாநாயகர் தனபால் சேலம் குகை மேல்நிலைப்பள்ளியில் வாக்கை பதிவு செய்தார்.

வாக்குப்பதிவு செய்த அரசியல் தலைவர்கள்!!

மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்களித்தார். திருத்துறைப் பூண்டி அருகே வேலூர் கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வந்த முத்தரசன், வாக்கு இயந்திர கோளாறால் 15 நிமிடமாக காத்திருந்தார். பின்னர் அவர் தனது வாக்கினை செலுத்தினார்.

வாக்குப்பதிவு செய்த அரசியல் தலைவர்கள்!!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வாக்கு பதிவு செய்தார். சாலிகிராமம் காவேரி பள்ளியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்.காரைக்குடி கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கினை செலுத்தினார்.

வாக்குப்பதிவு செய்த அரசியல் தலைவர்கள்!!

கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையம் அரசு பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் மகள்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாக்களித்தார்.

வாக்குப்பதிவு செய்த அரசியல் தலைவர்கள்!!

திண்டிவனத்தில் மரகதாம்பிகை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்துடன் வாக்களித்தார்.