மின்வாரிய காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப திட்டம்

 

மின்வாரிய காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப திட்டம்

ஐடிஐ படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது என மின்வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக மின்வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வயர்மேன், ஹெல்பர் காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களும் தனியார் மூலமே நிரப்பப்படுகின்றன. மின்வாரிய தலைமை பொறியாளரின் இந்த அறிவிப்பால் ஐடிஐ படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மின்வாரிய காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப திட்டம்

3 ஆண்டுகளுக்கு பணியாளர்களை நியமித்து கொள்ள மின்வாரியம் தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்காக 1 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக மின்வாரியம் சார்பில் கூறப்படுகிறது. தனியார் மூலம் நியமனமாகும் ஊழியர்களுக்கு மாதம் 12 ஆயிரத்து 360 ரூபாய் ஊதியம் வழங்கவும், ஆண்டுக்கு 5 விழுக்காடு ஊதிய உயர்வு என்றும் மின்வாரிய தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.