“அண்ணன் மட்டும் தட்டுறாரு; கைத்தட்டுங்களேன்”… கேட்டு வாங்கிய ஓபிஎஸ்

 

“அண்ணன்  மட்டும் தட்டுறாரு; கைத்தட்டுங்களேன்”… கேட்டு வாங்கிய ஓபிஎஸ்

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கலின் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஓபிஎஸ் கைத்தட்டலை கேட்டு வாங்கினார்.

“அண்ணன்  மட்டும் தட்டுறாரு; கைத்தட்டுங்களேன்”… கேட்டு வாங்கிய ஓபிஎஸ்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். அப்போது நிதிநிலை அறிக்கையை வாசித்த அவர் வனத்துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “சுற்றுசூழல் மாசை குறைக்க மரம் நடும் திட்டத்தை 2011-2012 ஆம் ஆண்டில் இருந்து வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடப்பட்ட 72 லட்சம் மரக்கன்றுகள் உட்பட 6.12 கோடி மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது ” என்றார்.

“அண்ணன்  மட்டும் தட்டுறாரு; கைத்தட்டுங்களேன்”… கேட்டு வாங்கிய ஓபிஎஸ்

அப்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் கைத்தட்டினார். இதை கவனித்த துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட் வாசிப்பதை நிறுத்திவிட்டு, எல்லாரும் கைதட்டுங்களேன்; அண்ணன் மட்டும் தான் கைதட்டுகிறார்” என்று கூறி சிரிக்க மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கைதட்டினர்.