தீபாவளி கொண்டாட்டம்: தி.நகர் ரங்கநாதன் தெரு ஒருவழி பாதையாக மாற்றம்

 

தீபாவளி கொண்டாட்டம்: தி.நகர் ரங்கநாதன் தெரு ஒருவழி பாதையாக மாற்றம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு ரங்கநாதன் தெரு ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள ஜவுளி கடைகளில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக் பாக்கெட், திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டம்: தி.நகர் ரங்கநாதன் தெரு ஒருவழி பாதையாக மாற்றம்

கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் உஸ்மான் சாலையில் இருந்து ரங்கநாதன் தெரு செல்லும் வழி ஒரு வழியாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பொருட்களை வாங்கிய பிறகு ராமேஸ்வரம் தெரு, ரயில்வே பிடர் ரோடு வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ரங்கநாதன் தெருவில் புதிதாக 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க பிரித்து அனுப்பும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.