திம்மகெடா நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

 

திம்மகெடா நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே ஆந்திர வனப்பகுதியில் அமைந்துள்ள திம்மகெடா நீர்வீழ்ச்சியில் விடுமுறை தினத்தையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள்குவிந்தனர். வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் ஊராட்சி வெங்கட்டராஜபுரம் கிராமத்தை ஒட்டி ஆந்திர வனப்பகுதி உள்ளது. கௌண்டன்யாவனவிலங்குகள் சரணாலயத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் திம்மகெடா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களாக பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திம்மகெடா நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

மேலும், சித்தூர் மாவட்டம் வீரண்ணமலை மற்றும் சிந்தகாமணிபெண்டா பகுதிகளில்இருந்து வரும் தண்ணீர் ராஜரைபாறை வழியாக வந்து திம்மகெடா நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டிவருகிறது. இந்நிலையில் தீபாவளியை அடுத்த ஞாயிறுவிடுமுறை தினம் என்பதால் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் நேற்று நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்தனர். வெங்கட்டராஜபுரம் பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, வனப்பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.