• March
    31
    Tuesday

Main Area

Main



“என் மருந்தால் கொரானாவை ஒழிக்கலாம்...அனுமதி தாருங்கள்!” - சித்த மருத்துவர் தணிகாசலம் பிரத்யேக பேட்டி

சித்த மருத்துவர் தணிகாசலம்
சித்த மருத்துவர் தணிகாசலம்

சென்னை: கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து தன்னிடம் இருப்பதாகவும் அதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என்றும் சித்த மருத்துவர் தணிகாசலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்து, நிலவேம்பு குடிநீரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் சித்த மருத்துவர் தணிகாசலம். இவரது மருந்தை சீனா அரசு ஏற்றுக் கொண்டு அவருக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து தன்னிடம் மருந்து இருப்பதை ஊடகங்கள் முன்னிலையில் நிரூபித்து காட்டினார். இந்த நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து தன்னிடம் இருப்பதாகவும் அதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என்றும் சித்த மருத்துவர் தணிகாசலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ttn

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “எனக்கு நிறைய மிரட்டல்கள் வருகின்றன. ஆனால் இன்று கொரோனா தற்காப்பு மருந்து என்னிடம் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பு நிகழாமல் பாதுகாப்பதில் சித்த மருத்துவர்களுக்கும் கடமை உள்ளது. கொரோனா நோய் வருவதற்கு முன்பாகவே அதைத் தடுக்கும் மருந்து எங்களிடம் உள்ளது. மேலும் அரசு மருத்துவர்கள் கபச்சுரக் குடிநீர் மருந்தை பரிந்துரை செய்துள்ளனர்.

ttn

கொரோனாவை பொறுத்தவரையில், நுரையீரலில் தொற்று ஏற்பட்டு நோய் தீவிரமாகிறது. அதைத் தடுக்கவே எங்கள் மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த கொரோனா நோய்க்கு வாதசுரக் குடிநீர் சிறந்ததாக இருக்கும். என்னுடைய மருந்தால் பல கொரோனா நோயாளிகள் குணமாகி வருகின்றனர். அதற்கான வீடியோ ஆதாரத்தை என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளேன்.

ttn

வாதச்சுரம் குடிநீரில் பெருங்காசுரி, திப்பிலி, சித்திரமூலவேர்பட்டை, சங்கம் வேர்பட்டை, வெள்ளறுகு சம்மூலம், நிலவேம்பு சம்மூலம், சிறுதேக்கு, செவ்வியம் கோஷ்டம் உட்பட இன்னும் பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சித்த மருத்துவரை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதை அரசும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் தமிழகத்தில் இருந்து கொரோனாவை எளிதில் விரட்டலாம்” என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.