‘கைகலப்பு அரசியல்’ – எல்லை மீறும் தொண்டர்கள், கண்டுகொள்ளாத தலைமைகள்!

 

‘கைகலப்பு அரசியல்’ – எல்லை மீறும் தொண்டர்கள், கண்டுகொள்ளாத தலைமைகள்!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வெறும் வார்த்தைப் போர் நடத்தி வந்த கட்சிகள் தற்போது அதிரடியாக தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளன. திமுகவினர் அதிமுக அரசை குறைக் கூறுவதும், அதற்கு அதிமுகவினர் பதில் கூறுவதுமாக பரபரப்புக்கு குறைவில்லாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாமக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியிருக்கின்றன.

‘கைகலப்பு அரசியல்’ – எல்லை மீறும் தொண்டர்கள், கண்டுகொள்ளாத தலைமைகள்!

அரசியல் ரீதியாக இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவதால், தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே ஆங்காங்கே பிரச்சாரங்கள் தொடங்கி விட்டன. ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என திமுகவும், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என கமல்ஹாசனும் அதிரடியாக களமிறங்கியிருக்கும் அதே வேளையில் முதல்வர் பழனிசாமியும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

தமிழகத்தின் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தாலும், எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதில்லை. ஆனால், இந்த முறையோ எல்லா தேர்தலுக்கும் நேர்மாறாக நடந்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சேலம் ஓமலூர் அருகே பிரச்சாரத்திற்காக சென்ற திமுக எம்.பி தயாநிதிமாறனின், காரை வழிமறித்த பா.ம.கவினர் கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.

‘கைகலப்பு அரசியல்’ – எல்லை மீறும் தொண்டர்கள், கண்டுகொள்ளாத தலைமைகள்!

இச்சம்பவத்தை தொடர்ந்து நேற்று, அரியலூர் அருகே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் கார் மீது த.மா.காவினர் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது மறு தாக்குதல் நடத்த பாதிக்கப்பட்ட கட்சி கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இவ்வாறு அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறுவது அரசியல் களத்தில் கலவரத்தை உண்டு பண்ணியுள்ளது.

‘கைகலப்பு அரசியல்’ – எல்லை மீறும் தொண்டர்கள், கண்டுகொள்ளாத தலைமைகள்!

தமிழகம் மட்டுமல்லாது அண்மையில் மேற்கு வங்கம் சென்றிருந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவின் காரும் வழிமறிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட கட்சித் தலைமையில் இருப்பவர்களின் தூண்டுதல்களாலேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் ஒரு நல்ல அரசியலுக்கும் ஆட்சிக்கும் அடித்தளம் அமைக்காது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

‘கைகலப்பு அரசியல்’ – எல்லை மீறும் தொண்டர்கள், கண்டுகொள்ளாத தலைமைகள்!

திமுகவின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி மாறன் சென்ற கார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், தேர்தல் முடிந்த பிறகும் கட்சிகளுக்கிடையே அடிதடி போன்ற களேபரத்தை தூண்டும் என்பதே நிதர்சனம். அதனால், இத்தகைய செயல்களை கைவிட்டு ஆரோக்கியமான அரசியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் வழி நடத்த வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.