டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடையடைப்பு, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடையடைப்பு, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வியாபாரிகள் கடைகளை அடைத்தும், அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடையடைப்பு, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, தஞ்சை மாவட்டத்தில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தஞ்சை நகரில் உள்ள உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டன. மேலும், வேளாண் சட்டங்களை கண்டித்து, காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் தலைமையில், தஞ்சாவூர் காந்திஅடிகள் சாலையில் ஏராளமான விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடையடைப்பு, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளுர் உழவர் சந்தை பகுதியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் போராட்டத்தில், திமுகவினர் முன்னிலைப்படுத்தியதால் இரு கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடையடைப்பு, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதசெய்து அழைத்துச்சென்றனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடையடைப்பு, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் நான்குரோடு பகுதியில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தினபோது, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினர். பின்னர், நான்கு ரோடு பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று தலைமை அஞ்சல் நிலையம் முன்பு போராட்டத்தை நிறைவு செய்தனர்.எ