இன்று முழு ஊரடங்கை மீறியதாக 2,308 வழக்குகள் பதிவு; 1,453 வாகனங்கள் பறிமுதல்

 

இன்று முழு ஊரடங்கை மீறியதாக 2,308 வழக்குகள் பதிவு; 1,453 வாகனங்கள் பறிமுதல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் 24ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு, ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு செல்ல இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டது.

இன்று முழு ஊரடங்கை மீறியதாக 2,308 வழக்குகள் பதிவு; 1,453 வாகனங்கள் பறிமுதல்

இந்நிலையில் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு காலத்தில் இன்று மாலை 6 மணி வரையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 2,308 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,497 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் இருசக்கர வாகனங்கள் 319, ஆட்டோக்கள் 24, இலகுரக வாகனங்கள் 14, இதர வாகனங்கள் 2 என மொத்தம் 359 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

முகக்கவசம் அணியாத 1,288 நபர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 147 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளது.

uur