சசிகலா வருகை! பதட்டத்தில் காவல்துறை

 

சசிகலா வருகை! பதட்டத்தில் காவல்துறை

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா, அதிலிருந்து மீண்டு பெங்களூரு சொகுசு விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த சூழலில் வரும் 8 ஆம் தேதி தமிழகம் வரும் சசிகலாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்க அமமுகவினரும், அதிமுகவிலுள்ள அவரது தொண்டர்களும் திட்டமிட்டுள்ளனர்.

சசிகலா வருகை! பதட்டத்தில் காவல்துறை

இந்நிலையில் காவல்துறை திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு காவல்துறையினர், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்தில் வகுப்பு, சமய, அரசியல் ரீதியான பிரச்னைகள் எதுமின்றி அமைதியை நிலைநாட்டி சட்டம் ஒழுங்கை பராமரித்துவருகின்றனர்.

குறிப்பிட்ட அமைப்புகள் அரசியல் காரணங்களுக்காக சட்டத்தை கையில் எடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது, பொது அமைதியை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.சில குறிப்பிட்ட அமைப்புகள் திரளாக கூடி பொது அமைதியை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.இதுபோன்ற செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதுடன், மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திக இடையூறாக இருக்கும் என்பதால் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென கேட்டுக்கொள்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளது.

சசிகலா வருகை! பதட்டத்தில் காவல்துறை

அமமுகவினரும், அதிமுகவிலுள்ள சசிகலா ஆதரவாளர்களும் சசிகலா தமிழகம் வரும் நாளில் ஏதேனும் பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் பதட்டத்தில் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழக காவல்துறை.