புதுச்சேரிக்கு செல்ல… குடிமகன்கள் பயன்படுத்தும் புது டெக்னிக்!

 

புதுச்சேரிக்கு செல்ல…  குடிமகன்கள் பயன்படுத்தும் புது டெக்னிக்!

தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த 10ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது தொற்று குறைந்திருப்பதால் சில தளர்வுகளை அளித்திருக்கும் தமிழக அரசு, வரும் 14ம் தேதியிலிருந்து டாஸ்மாக் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதனிடையில், புதுச்சேரியில் மதுபான விற்பனை தொடங்கப்பட்டதால் தமிழகத்தை சேர்ந்த பலர் காவல்துறையினரின் பிடியில் சிக்காமல் புதுச்சேரிக்கு படையெடுத்தனர்.

புதுச்சேரிக்கு செல்ல…  குடிமகன்கள் பயன்படுத்தும் புது டெக்னிக்!

வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காவல்துறை சோதனையில் இருந்து தப்பிக்க மது பிரியர்கள் ஆற்றை கடந்து காரைக்கால் செல்வதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து பல மது பிரியர்கள் புதுச்சேரிக்கு படையெடுப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காரைக்காலை இணைக்கும் பகுதியில் 24 மணி நேரமும் சோதனை நடைபெறுகிறது. இதனால் சோதனை இல்லாத இடத்தில் ஆற்றைக் இணைக்கும் சாலை வரை சென்று, அங்கேயே வாகனங்களை நிறுத்திவிட்டு ஆற்றை கடந்து காரைக்கால் செல்வதையும் மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டு அதே வழியில் திரும்புவதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.