தமிழ்நாட்டின் கடைசி ராஜாவான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்!

 

தமிழ்நாட்டின் கடைசி ராஜாவான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்!

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி (92)உடல் நலக்குறைவால் காலமானார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தின் அருகில் அமைந்துள்ள சிறப்பு மிக்க சமஸ்தானம் சிங்கம்பட்டி. சேர, சோழ பாண்டியர்களுக்கு இணையான பெருமை இதற்கும் உண்டு. தமிழகத்தில் ஜமீன் சொத்துக்கள் முடக்கப்பட்டு, ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட நிலையில், இந்த சட்டதிருத்தத்திற்கு முன்பு கடைசியாக பட்டம் சூடி தமிழகத்தின் கடைசி ஜமீனாக வந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தாரான முருகதாஸ் தீர்த்தபதி.

தமிழ்நாட்டின் கடைசி ராஜாவான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவைச் சேர்ந்த இந்த ஜமீனே புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலை நிர்வகித்து வந்தது. ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட் டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி. இவரது முழுப்பெயர் தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாக முத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி.