வேலைவாய்ப்பின் பக்கம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினின் கவனம் … நாளை கையெழுத்தாகும் 33 ஒப்பந்தங்கள்!

வேலைவாய்ப்பின் பக்கம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினின் கவனம் … நாளை கையெழுத்தாகும் 33 ஒப்பந்தங்கள்!

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தொழில் துறை வளர்ச்சி மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. அதை விடுத்து மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தொழில் வளர்ச்சியால் அதிகப்படியான தொழிற்சாலைகள் உருவாகும். வேலைவாய்ப்புகள் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

வேலைவாய்ப்பின் பக்கம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினின் கவனம் … நாளை கையெழுத்தாகும் 33 ஒப்பந்தங்கள்!

உற்பத்தி அதிகரிக்கும். மக்களிடம் காசு புழங்கும் பட்சத்தில் நுகர்வு அதிகரிக்கும். இவையனைத்தும் சங்கிலித்தொடர் போல ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. இத்தகைய தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதில்தான் மாநில அரசின் நிர்வாகத் திறமை மதிப்பிடப்படுகிறது. மாநிலத்தில் இருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கேற்ப வேலைவாய்ப்புகளையும் அதற்கான தொழிற்சாலைகளையும் அரசால் உருவாக்க முடியுமா? இந்தக் கேள்விக்கான பதிலில் இருந்து தான் தனியார் முதலீடுகள் கவனம் பெறுகின்றன.

வேலைவாய்ப்பின் பக்கம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினின் கவனம் … நாளை கையெழுத்தாகும் 33 ஒப்பந்தங்கள்!

கடந்த சில ஆண்டுகளாக தனியார் முதலீடுகளை ஈர்க்க தவறிய முந்தைய அதிமுக அரசு துரிதமாகச் செயல்பட்டு, சீர்திருத்தங்களை மேற்கொண்டு ’தொழில் தொடங்க உகந்த மிகச் சிறந்த மாநிலமாக’ தமிழ்நாட்டை மாற்றியது. கொரோனா பேரிடர், லாக்டவுன் என பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தை மீண்டும் தக்கவைத்திருந்தது தமிழ்நாடு. திமுக அரசு பொறுப்பேற்கும் போது கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. விரைவாக செயல்பட்டு அதனை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

வேலைவாய்ப்பின் பக்கம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினின் கவனம் … நாளை கையெழுத்தாகும் 33 ஒப்பந்தங்கள்!

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தொழில்துறையின் பக்கம் அரசின் கவனம் சென்றுள்ளது. தனியார் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, 33 தனியார் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. ரூ.10,000 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நாளை நடைபெறும் நிகழ்வில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.