இன்னும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வாங்கவில்லையா?… உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!

 

இன்னும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வாங்கவில்லையா?… உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!

கொரோனா நிவாரண நிதியை பெறாதவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் மக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன் படி, ஆட்சிக்கு வந்த முதல் நாளே கொரோனோ நிவாரண நிதியை வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். மே மாதம் 2000 ரூபாய், ஜூன் மாதம் 2000 ரூபாய் என இரண்டு தவணையாக வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

இன்னும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வாங்கவில்லையா?… உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!

அதன் படியே, மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மே மாதமும் ஜூன் மாதமும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்தத் தொகையை பெறாதவர்களுக்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா நிவாரண நிதியை பெறாதவர்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தொகையை பெற்றுக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஜூலை 31-ஆம் தேதிக்குள் தொகையை பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம் என்றும் மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பித்த 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.