வேலுமணிக்கு எதிரான புகாரில் விசாரணை நடத்தப்படும் – தமிழக அரசு உறுதி!

 

வேலுமணிக்கு எதிரான புகாரில் விசாரணை நடத்தப்படும் – தமிழக அரசு உறுதி!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படுமென நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி வேலுமணி. அதிமுக ஆட்சி மீது பல ஊழல் புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், அதிமுக முக்கிய பிரமுகரான வேலுமணியும் அந்த புகார்களில் சிக்கினார். அவருக்கு எதிராக திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர், மாநகராட்சி தொண்டர் முறைகேடுகளில் வேலுமணி ஈடுபட்டதாகவும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், வேலுமணிக்க எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

வேலுமணிக்கு எதிரான புகாரில் விசாரணை நடத்தப்படும் – தமிழக அரசு உறுதி!

அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி க்கு எதிரான புகாரில் விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது. அவர் மீதான புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.