பள்ளிகளை திறப்பது எப்போது?.. நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறையின் பதில்!

 

பள்ளிகளை திறப்பது எப்போது?.. நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறையின் பதில்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. தேர்வு முடிவில், தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. அதனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. சமீபத்தில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 11 ஆம் வகுப்பும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் எப்போது தொடக்கப்படும் என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

பள்ளிகளை திறப்பது எப்போது?.. நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறையின் பதில்!

இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி மாணவர்களை போல தனித்தேர்வர்களையும் ஆல்பாஸ் ஆக அறிவிக்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். இதனைத்தொடர்ந்து, பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதா என பள்ளிக்கல்வித்துறையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அரசு, பள்ளிகள் திறப்பது குறித்து இப்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நெருங்குவதாகவும் அக்டோபர் மாதம் ரிசல்ட் வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது.