12ஆம் வகுப்பு மாணவர்களே தேர்வுக்கு தயாரா? – அரசு முக்கிய அறிவிப்பு!

 

12ஆம் வகுப்பு மாணவர்களே தேர்வுக்கு தயாரா? – அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது பதவியேற்றுள்ள அரசு பொதுத்தேர்வை நடத்துவதில் தீர்க்கமாக இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் பேட்டியளிக்கும் போது கூட, தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து மாணவர்களின் பாராட்டைப் பெறுவதை விட தேர்வு நடத்தி அவர்களின் எதிர்காலத்தைப் பேணுவதே எங்கள் கடமை என்றார்.

12ஆம் வகுப்பு மாணவர்களே தேர்வுக்கு தயாரா? – அரசு முக்கிய அறிவிப்பு!

ஆகவே கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்பதால் மாணவர்களைத் தயார்படுத்தும் பணியில் ஆசிரியர்களும் பெற்றோரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுத்தேர்விற்கு தயாராகும் வகையில் அலகுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை வாட்ஸ்-அப் மூலம் நடத்தி முடிக்க அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களே தேர்வுக்கு தயாரா? – அரசு முக்கிய அறிவிப்பு!

மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்க வேண்டும். இதன்மூலம் தனித்தனியாக வினாத்தாள்களை அனுப்ப வேண்டும். இதற்கான விடைகளை தனித்தாளில் எழுத அறிவுறுத்த வேண்டும். இதில் மாணவர்களின் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும். இந்த விடைத்தாள்களில் பெற்றோர்களின் கையொப்பம் பெற வேண்டும். விடைத்தாளைப் படம்பிடித்து PDF ஆக மாற்றி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

12ஆம் வகுப்பு மாணவர்களே தேர்வுக்கு தயாரா? – அரசு முக்கிய அறிவிப்பு!

வாட்ஸ்-அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக் கூடாது. வாட்ஸ்-அப் மூலம் விடைத்தாள்களை திருத்தி ஆசிரியர்கள் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்த அலகுத் தேர்வு பிளஸ் 2 மாணவர்களை பொதுத்தேர்விற்கு தயார்படுத்தும் வகையில் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.