தமிழ்நாட்டில் திடீரென உயர்ந்த கொரோனா… ஆட்சியர்களுக்கு பறந்த அலர்ட் கடிதம்!

 

தமிழ்நாட்டில் திடீரென உயர்ந்த கொரோனா… ஆட்சியர்களுக்கு பறந்த அலர்ட் கடிதம்!

கொரோனா 2ஆம் அலையில் தத்தளித்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதுவும் திமுக அரசு புதிதாகப் பொறுப்பேற்ற சமயம் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் மிகக் கடுமையான ஊரடங்கை போட்டு கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது தமிழ்நாடு அரசு. தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழே சென்றுள்ளது. மூன்றாம் அலைக்கு வேறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்றவாறு சுகாதாரக் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் திடீரென உயர்ந்த கொரோனா… ஆட்சியர்களுக்கு பறந்த அலர்ட் கடிதம்!

இச்சூழலில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு மிக முக்கியமான அதிரடியான முடிவை எடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு மக்கள்நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி போடுவதை திட்டமிட்டு துரிதப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். நாளை மறுநாள் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்திருக்கும் நிலையில், அதிகம் பேர் பயன்பெறுவதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் திடீரென உயர்ந்த கொரோனா… ஆட்சியர்களுக்கு பறந்த அலர்ட் கடிதம்!

கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தொற்று கண்டறியப்படும் நபருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் உடனடியாகக் கண்டறிந்து பரிசோதனையை வேகப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அதேபோல 12ஆம் தேதி மெகா முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யவும் சுட்டிக்காட்டியுள்ளார். சென்னை மாநகராட்சி மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.