மேகதாது அணை பற்றி விவாதிக்கக் கூடாது: கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!

 

மேகதாது அணை பற்றி விவாதிக்கக் கூடாது: கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!

காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க வேண்டாம் என தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காணொளி வாயிலாக அனைத்து மாநில அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்த வகையில் காவிரி மேலாண்மை கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ் சிங், மேகதாது தொடர்பான கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் தர கோரினார். இந்த கூட்டத்தில் மேகதாது அணைதொடர்பாக விவாதித்து அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேகதாது அணை பற்றி விவாதிக்கக் கூடாது: கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!

தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே பலமுறை நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டங்களில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படவில்லை.

மேகதாது அணை பற்றி விவாதிக்கக் கூடாது: கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!

கர்நாடக அரசை பொறுத்தவரையில் மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் என முனைப்பில் இருந்து கொண்டிருக்கிறது. அண்மையில் டெல்லிக்கு சென்ற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம், இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை கூட்டத்தில் இதற்கான அனுமதியை பெறுவோம் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தான், கர்நாடக அரசின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கூட்டத்தின் முடிவில் மேகதாது அணை தொடர்பான முடிவை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.