மீண்டும் ‘லாக்டவுன்’ அமல்படுத்தப்பட நேரிடும்.. தமிழக அரசு எச்சரிக்கை!

 

மீண்டும் ‘லாக்டவுன்’ அமல்படுத்தப்பட நேரிடும்.. தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. அந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளும் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட நேரிடும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீண்டும் ‘லாக்டவுன்’ அமல்படுத்தப்பட நேரிடும்.. தமிழக அரசு எச்சரிக்கை!

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா நோய் பரவலை தடுக்க அரசால் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கிட்டத்தட்ட 4,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். கொரனோ தோற்றுக் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் நலன் கருதியும் தமிழக அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 30.3.2021 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மீண்டும் ‘லாக்டவுன்’ அமல்படுத்தப்பட நேரிடும்.. தமிழக அரசு எச்சரிக்கை!

நோய்தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு 10.04.2021 முதல் முற்றிலுமாக தடை விதித்தும் ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும் அரசு 8.4.2021 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சிகளில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும். கொரோனா 2வது அலையை சமாளிக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.