அமலுக்கு வந்தது பொதுமுடக்கம்: தீவிர கண்காணிப்பில் சென்னை!

சென்னை மற்றும் அதன் உட்பகுதியில் உள்ள இடங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் பொது முடக்கம் காரணமாக சுமார் 18,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ள இந்த அரசின் இந்த முடிவுக்கு மக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருமாறு காவல்துறையினர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வாகனங்களில் சென்று பொருட்களை வாங்காமல் இரண்டு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திலேயே நடந்து சென்று பொருட்களை வாங்கி வருமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுமுடக்கத்தை கண்காணிக்க சென்னை நகரில் 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேவையின்றி வாகனங்களில் பயணம் செய்வோரின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். முக்கியமாக காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் எந்த வாகனமும் செல்ல கூடாது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனால் அந்த சாலைகள் மூடப்பட்டுள்ளது. முக்கியமாக திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது என்றும் அதை புதிதாக புதுப்பிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் அதன் உட்பகுதியில் உள்ள இடங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

அமெரிக்காவிலும் களைகட்டிய ராமர் கோயில் பூமிபூஜை கொண்டாட்டங்கள்!

அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை விழாவை அமெரிக்காவிலும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர் அங்குள்ள இந்தியர்கள். அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 200 மத தலைவர்களுக்கு...

அண்ணாவின் கொள்ளுப்பேத்தி குடிமைப் பணி தேர்வில் வெற்றி – உதயநிதி வாழ்த்து

2019 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது....

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் குடும்பத்துடன் தலைமறைவு!

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 286 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் அதிகபட்சமாக ஒரே நாளில் 7பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 182 நபர்கள் புதுச்சேரியிலும், 21 பேர்...

மாப்பிள்ளை பிளஸ் டூ… மகள் இன்ஜினீயரிங்… காதல் திருமணத்தால் ஆத்திரம்!- அந்தஸ்தால் இளைஞரை கொன்று சாலையில் வீசிய பெண்ணின் தந்தை, தாய் மாமன்

பிளஸ் டூ படித்த காய் கறி வியாபாரியை இன்ஜினீயரிங் படித்து வரும் மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை, மாப்பிள்ளையை கொலை செய்துவிட்டு சாலையில் வீசி சென்ற...