துயர சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

 

துயர சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்க, மறுபுறம் பல துயர சம்பவங்களில் பலர் உயிரிழக்கின்றனர். விபத்து, பாம்பு கடி, யானை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் உயிரழக்கும் நபர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி அளித்தது. அந்த வகையில் தற்போது துயர சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

துயர சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

சமீபத்தில் முறப்பநாடு அருகே 4 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை கைது செய்வதற்காக சென்ற தலைமை காவலர் சுப்பிரமணியன், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது போன்ற பல சம்பவங்களில் 25 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். அதனால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.