ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டாம்: தமிழக அரசு திட்டவட்டம்!

 

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டாம்: தமிழக அரசு திட்டவட்டம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் படி, ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த மே 5ஆம் தேதி தொடங்கியது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டாம்: தமிழக அரசு திட்டவட்டம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதி வரும் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ள நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதால் அதுவரை ஆக்சிஜன் உற்பத்தி தொடரும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.