“மதுரையில் 5 தொகுதிகளில் பாரபட்சம் காட்டும் திமுக அரசு” – முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்!

“மதுரையில் 5 தொகுதிகளில் பாரபட்சம் காட்டும் திமுக அரசு” – முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்!

மதுரை மாவட்டத்தில் பாரபட்சம் இல்லாமல் அனைத்துத் தொகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அம்மனுவில், “மதுரை மாவட்டத்தில் கொரோனா அசுர வேகத்துடன் பரவி வருகிறது. நேற்று 1,538 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். இது மதுரை மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“மதுரையில் 5 தொகுதிகளில் பாரபட்சம் காட்டும் திமுக அரசு” – முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்!

மதுரை மாவட்டத்தில் இறப்பு விகிதம் கூடுதலாக உள்ளது. கிராமப்புறங்களில் நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது இதை சரிசெய்ய காய்ச்சல் முகாம் நடத்திட வேண்டும் தற்போது மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மேலூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது.

“மதுரையில் 5 தொகுதிகளில் பாரபட்சம் காட்டும் திமுக அரசு” – முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்!

அதேபோல் நோய்த் தடுப்பு நடவடிக்கையிலும் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. இதில் பாரபட்சம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் அம்மா கிளினிக் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது மருத்துவர்களின் பற்றாக்குறையை காரணம் காட்டி மூடப்பட்டு உள்ளது அதை மீண்டும் திறக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.