கோவை: கொரோனா பரிசோதனையில் முறைகேடு! – தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி ரத்து

 

கோவை: கொரோனா பரிசோதனையில் முறைகேடு! – தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி ரத்து

கோவையில் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்ட தனியார் ஆய்வுக் கூடங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதன் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை: கொரோனா பரிசோதனையில் முறைகேடு! – தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி ரத்துதமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் 35 ஆயிரம் மாதிரிகள் வரை இந்த ஆய்வுக் கூடங்களில் பரிசோதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் கொரோனா பரிசோதனையில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கோவை: கொரோனா பரிசோதனையில் முறைகேடு! – தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி ரத்து
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்யப்படும் மாதிரிகளுக்கு கட்டணம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு அதிக அளவில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது போன்ற முறைகேட்டில் கோவையைச் சேர்ந்த நான்கு தனியார் ஆய்வுக் கூடங்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து கோவையின் நான்கு கொரோனா பரிசோதனை ஆய்வுக் கூடங்களுக்கு தடை விதித்து தமிழக சுகாதார திட்ட இயக்குநர் அஜய் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

கோவை: கொரோனா பரிசோதனையில் முறைகேடு! – தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி ரத்துமக்களின் அச்சத்தை பயன்படுத்திக் கொண்டு மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து இது போன்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.