கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு… கிளம்பிய எதிர்ப்பு – கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அரசு!

கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு… கிளம்பிய எதிர்ப்பு – கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அரசு!

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டள்ளன.

கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு… கிளம்பிய எதிர்ப்பு – கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அரசு!

2018ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட அரசுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டுமென அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தன.

கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு… கிளம்பிய எதிர்ப்பு – கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அரசு!

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, கூட்டுறவு சங்கத்தின் தலைவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களை திடீரென்று கலைக்க கூடாது எனவும், இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால், கூட்டுறவு சங்கத்தை கலைக்க தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.

மதராசு உயர் நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா

அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட மாட்டாது என உறுதியளித்ததுடன், முறைகேடு நடந்த சங்கங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.