கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை!

 

கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை!

தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இல்லாமல் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். அதனால் கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளான பேருந்து சேவைக்கு அரசு அனுமதி அளித்தது. அதனைத்தொடர்ந்து நேற்று செப்.7 ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மற்றும் பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி அளிப்பதாகவும் மக்கள் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டது.

கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை!

அதே போல, மெட்ரோ ரயில்களுக்கும் அரசு அனுமதி அளித்ததன் பேரில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலுக்கு அரசு அனுமதித்ததால், திருச்சி – செங்கல்பட்டு (விருத்தாசலம்), திருச்சி – செங்கல்பட்டு (மயிலாடுதுறை), மதுரை – விழுப்புரம், கோவை – காட்பாடி, அரக்கோணம் – கோவை, திருச்சி – நாகர்கோவில், கோவை – மயிலாடுதுறை உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள் வரும் 7ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன.

கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை!

இந்த நிலையில், கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை – கன்னியாகுமரி, சென்னை-தூத்துக்குடி, சென்னை-மேட்டுப்பாளையம், சென்னை எழும்பூர் – செங்கோட்டை மற்றும் சென்னை- மதுரை உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கோரியுள்ளது.